எங்களை பற்றி

                    தமிழ்நாடு அரசு 1971-ஆம் ஆண்டு தொழிலாளர் நல வாரியத்தை அரசாணை (நிலை) எண்.222, தொழிலாளர் துறை நாள். 20.02.1971-ன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் நலனை மேம்படுத்த தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம், 1972 இயற்றப்பட்டு 01.01.1973 முதல் நடைமுறைக்கு வந்தது.

வாரியத்தின் செயல்பாடுகள்

1972-ம் வருடத்திய தொழிலாளர் நல நிதிச் சட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்
 • தொழிலாளர் நல நிதி வசூல் செய்தல்.
 • தொழிலாளர் நல நிதியினை பராமரித்து அதன் மூலம் தொழிலாளர் மற்றும் அவரைச் சார்ந்தோர் நலனை மேம்படுத்துதல்.
 • தொழிலாளர் நல வாரியத்தின் அமைப்பு.
 • வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம்.
 • குழு நியமித்தலுக்கான அதிகாரம்.
 • வாரியத்தின் நடவடிக்கைகள்.
 • கொடுபடாத் தொகை வசூல் மற்றும் திரும்ப வழங்குதல்.
 • நிதி முதலீடு.
 • சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கையினை சமர்ப்பித்தல்.
 • விதிகள் மற்றும் வரன்முறைகளை உருவாக்கும் அதிகாரம்.
தொழிலாளர் நல நிதி விதிகள் 1973-ன் முக்கிய அம்சங்கள்
 • வேலையளிப்போர் செலுத்த வேண்டிய தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகைகள் மற்றம் கொடுபடாத் தொகைகள்.
 • தணிக்கைக் கணக்குகளை பராமரித்தல்.
 • வாரியத்தின் நிதி நிலை அறிக்கை.
 • கூடுதல் செலவினம்.
 • நல நிதி செலுத்தும் முறை.
 • நல நிதி பங்கு செலுத்துதல்.
 • வாரியக் கூட்டங்கள்.
 • வாரியக் கூட்டம் நடத்துவதற்கான நிர்ணயிக்கப்பட்ட குறைந்த எண்ணிக்கை நபர்கள்.
 • செயலாளரின் நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரங்கள்.
 • ஆண்டறிக்கை வெளியிடுதல்.
 • வேலையளிப்போர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.
படிவம் A - வாரியத்திற்கு செலுத்திய தொழிலாளர் நல நிதி பங்கிற்கான விவரம்.
படிவம் B - சம்பளப் பதிவேடு.
படிவம் C - அபராதம் மற்றும் கொடுபடாத் தொகைகள் குறித்த பதிவேடுகள்.

வாரியத்தின் அமைப்பு

                          தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் சட்டப் பூர்வமாக 1.4.1975 முதல் தொழிலாளர் நல அமைச்சரை தலைவராகவும், வேலையளிப்பவர் பிரதிநிதிகள் ஐவர், தொழிலாளர் பிரதிநிதிகள் ஐவர், சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர், அரசு சார்புள்ள உறுப்பினர்கள் நால்வர் மற்றும் அரசு சார்பற்ற நியமன உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடங்கப்பட்டது.

வாரிய செயலாளர்

பெயர் பதவி
அ. யாஸ்மின் பேகம், பி.எல்., பி.ஜி.டி.எல்.ஏ,. எம்.பி.ஏ., செயலாளர்

தொழிலாளர் நல நிதி

1.தொழிலாளர் நல நிதிச் சட்டப் பிரிவு 3-ன் படி தொழிலாளர் நல நிதியில் சேர்க்கப்படும் இனங்கள்

2.தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய ஆனால் கொடுபடாத் தொகைகள் அனைத்தும்.

3.தொழிலாளர்களிடமிருந்து வசூலித்த அபராதத் தொகை அனைத்தும்.

4.1936-ம் ஆண்டு ஊதியங்கள் வழங்கல் சட்டத்தின் 9-ம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு வரம்பு நிபந்தனை தமிழ்நாடு 1947-ம் ஆண்டு கடைகள் நிறுவனங்கள் சட்டத்தின் 36-ம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின் வரம்பு நிபந்தனை ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பபட்ட தொகை பிடித்தம்.

5.தொழிலதிபர்கள் தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் பங்குத் தொகை.

6.தமிழ்நாடு 1972-ம் ஆண்டு தொழிலாளர் நல நிதிச் சட்டத்தின் 14-ம் பிரிவின் கீழ் செலுத்திய அபராதத் தொகை மூலம் கிடைத்த வட்டி.

7.தாமே முன்வந்து அளிக்கின்ற நன்கொடை.

8.வாரியத்தின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக ஏனைய நிதி ஆதாரங்களிலிருந்து வாரியம் வசூலித்த தொகை.

9.தமிழ்நாடு 1972-ம் ஆண்டு தொழிலாளர் நல நிதிச் சட்ட பிரிவு 17(5)-ன் படி மாற்றப்பட்ட நிதி.

10.தமிழ்நாடு 1972-ம் ஆண்டு தொழிலாளர் நல நிதிச் சட்ட பிரிவு 18-ன் கீழ் பெறப்படும் கடன் தொகை.

11.1936-ம் ஆண்டு ஊதியங்கள் வழங்கல் சட்டம் 1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்கு இணங்க அரசின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ஆனால் எவராகிலும் கோரப்படாத தொகை.


12.அரசு வழங்கிய மானியங்கள் அல்லது முன்பணங்கள்.

13.தொழிலாளர் நலச் சட்ட விதிகளை மீறியதற்காக நீதிமன்றங்கள் தொழிலதிபர்களிடமிருந்து வசூலித்த அனைத்து அபராதங்கள் இதில் நிர்வாகச் செலவுக்காக நீதிமன்றம் பிடித்தம் செய்த தொகை நீங்கலாக மற்றும் பல்வேறு சட்டங்களை மீறப்பட்டதற்காக வேலையளிப்பவர் மீது தொழிலாளர் துறையால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட இணக்க கட்டணம்.

இச்சட்டம் பொருந்தும் நிறுவனங்கள்

i. தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் கீழ் வரும் தொழிற்சாலைகள்.

ii. மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் 1961-ன் கீழ் வரும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்.

iii. தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951-ன் கீழ் வரும் தோட்டங்கள்.

iv. தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958-ம் ஆண்டு உணவு நிறுவன சட்டத்தின் கீழ் வருகின்ற மற்றும் முந்தைய பன்னிரெண்டு மாதங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிசெய்யும் உணவு நிறுவனங்கள்.

v. முந்தைய பன்னிரெண்டு மாதங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைப் பணி அமர்த்தும் கடைகள் மற்றும் நிறுவனங்கள். 1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டத்தில் பிரிவு 2(d) (v) விளக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் இது பொருந்தும்.

ஒவ்வொரு தொழிலாளியும் தன் பங்கிற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.10/-ம் வேலையளிப்பவர் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.20/-ம் செலுத்த வேண்டும். (Amendment to Tamil Nadu Labour Welfare Fund Rules-1973 (G.O.Ms. No.16 Labour and Employment (G2) Department Date 20.01.2015).

தொழிலாளர் நல நிதி பங்குத் தொகை விவரம்

வருடம் பங்குத் தொகை தொழிலாளர் (ம) வேலைவாய்ப்புத்
துறை அரசாணை எண் மற்றும் நாள்
தொழிலாளி தொழிலதிபர் அரசு
1973-1981 (9 வருடம்) ரூ.1/- ரூ.2/- இல்லை ரூ.1/-
1982-1995 (14 வருடம்) ரூ.2/- ரூ.4/- ரூ.2/- ரூ.2/-
1996-1997 (2 வருடம்) ரூ.3/- ரூ.6/- ரூ.3/- ரூ.3/-
1998-2008 (11 வருடம்) ரூ.5/- ரூ.10/- ரூ.5/- ரூ.5/-
2009-2014 (6 வருடம்) ரூ.7/- ரூ.14/- ரூ.7/- ரூ.7/-
2015 முதல் ரூ.10/- ரூ.20/- ரூ.10/- ரூ.10/-

படிவம் A - வாரியத்திற்கு செலுத்திய தொழிலாளர் நல நிதி பங்கிற்கான விவரம்.
படிவம் B - சம்பளப் பதிவேடு.
படிவம் C - அபராதம் மற்றும் கொடுபடாத் தொகைகள் குறித்த பதிவேடுகள்.

நோக்கம்

                      தொழிலாளர் நல நிதியினை செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே வாரியத்தின் நோக்கமாகும். அவர்கள் வாரியத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை இவ்வாரியத்தின் வழியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடி பணபரிமாற்றம் வழியாக வெளிப்படையான மற்றும் செயல் திறனுள்ள முறையில் நன்மைகளை வழங்கி வருகிறது.

நிர்வாக அமைப்பு

வாரிய உறுப்பினர்கள்

தலைவர் திரு சி.வெ.கணேசன்,
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்
உறுப்பினர்கள்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலா ளர் நலன் மற்றும் திறன் மேம்பட்டுத் துறை திரு. முகமது நசிமுத்தீன், இ. ஆ. ப.,
அரசு முதன்மைச் செயலாளர், நிதித்துறை திரு. த. உதயச்சந்திரன், இ. ஆ. ப.,
முதன்மைச் செயலர்/ தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப
இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் திரு கே.ஜெகதீசன், எம்.ஈ.,
வேலையளிப்போர் பிரதிநிதிகள் ஐந்து உறுப்பினர்கள்
தொழிலாளர் பிரதிநிதிகள் ஐந்து உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று உறுப்பினர்கள்
நியமன உறுப்பினர்கள் இரண்டு உறுப்பினர்கள்
வாரியச் செயலாளர் திருமதி அ.யாஸ்மின்பேகம்,
கூடுதல் தொழிலாளர் ஆணையர்/செயலாளர்/ தலைமைச் செயல் அலுவலர்