ஓய்வு இல்லம்

                தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று தங்குவதற்காக சுற்றுலா தலங்களான மாமல்லபுரம் குற்றாலம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் விடுமுறை இல்லங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

சிங்காரவேலர் இல்லம்

                      வால்பாறையில் 1987-ம் ஆண்டு முதல் "சிங்காரவேலர் இல்லம்" செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரே நேரத்தில் 30 பேர்கள் தங்க படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

ஓய்வு இல்ல வாடகை விவரம்

வ.எண் விடுமுறை இல்லம் தொழிலாளர்களுக்கு பொதுமக்களுக்கு
இரு படுக்கை அறை பொது அறை இரு படுக்கை அறை பொது அறை
1 வால்பாறை 80/- 40/- 250/- 190/-
2 குற்றாலம்
(அ) சாதாரண காலம்
60/- 40/- 250/- 125/-
(ஆ) சாரல் காலம் 70/- 60/- 375/- 190/-

திரு.வி.க.இல்லம்

                      குற்றாலத்தில் 1983-ம் ஆண்டு முதல் "திரு.வி.க.இல்லம்" செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரே நேரத்தில் 93 பேர்கள் தங்க படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

ஓய்வு இல்ல வாடகை விவரம்

வ.எண் விடுமுறை இல்லம் தொழிலாளர்களுக்கு பொதுமக்களுக்கு
இரு படுக்கை அறை பொது அறை இரு படுக்கை அறை பொது அறை
1 வால்பாறை 80/- 40/- 250/- 190/-
2 குற்றாலம்
(அ) சாதாரண காலம்
60/- 40/- 250/- 125/-
(ஆ) சாரல் காலம் 70/- 60/- 375/- 190/-

ஜீவா இல்லம்

                      இணக்கப் பேச்சுவார்த்தை, தொழிலாளர் வழக்குகள் போன்றவைகளில் கலந்து கொள்ளும்பொருட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு வரும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மட்டும் குறைந்த வாடகையில் தங்குவதற்காக ஜீவா இல்லம் 1981-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஜீவா இல்ல இணைப்புக் கட்டிடம் 19.12.1998 முதல் செயல்பட்டு வருகிறது. இவ்வில்லத்தில் ஒரே நேரத்தில் 62 பேர்கள் தங்க படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜீவா இல்ல வாடகை விவரம்

தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மட்டும் இரு படுக்கை அறை (ரூ.) பொது அறை (ரூ.)
80/- 50/-